கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஒரு மாதத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விசாரணையின் தற்போதை நிலைமை குறித்த அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய்,வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி ஆஜராகினர். அதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More