Mnadu News

கோடை விடுமுறை ஆரம்பம்: வால்பாறை-ஆழியாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு அணை மற்றும் சிறுவர் பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அதையடுத்து, சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளளது. அங்கு அவ்வப்போது லேசான மழையுடன், இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.

Share this post with your friends