Mnadu News

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்; முழு விவரம் இதோ

பொங்கலை திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 19,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுப்பர். இதனையடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம். பூந்தமல்லி புறவழிச்சாலை மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும்.

பெங்களூரு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கோயம்பேடு தவிர வேறு எங்கு இருந்தும் இயக்கப்படாது.

கோயம்பேடு பேருந்து நிலையம்;

செஞ்சி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாசலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் வரை செல்ல வேண்டாம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே செல்லலாம்.

பொங்கல் முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 16- ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினமும் இயங்கும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 11,130 பஸ்கள் இயக்கப்படும். ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17,589 பஸ்கள் இயக்கப் பட இருக்கிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More