Mnadu News

கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்கள்: முடக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை.

கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என்பது தொடர்பான மனு, இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அதில் , தமிழகம் முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this post with your friends