விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.அந்த விழாவில், ஒயர்கள் அறுந்து விழுந்ததில், 6 பேர் பரிதபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், ஒலி ஒளி ஏற்பாடு செய்திருந்த ராஜாவுக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, இந்த வழக்கை பொருத்தவரை, ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்று கூறி, 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, தீர்ப்பளித்ததோடு, கோயில் திருவிழாக்களின்போது விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

நியூ யார்க்கில் அபாய நிலையில் காற்றுமாசு: மூச்சு விட சிரமப்படும் மக்கள்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உருவாகியுள்ள புகை மண்டலத்தால் நியூ யார்க்கின் காற்று...
Read More