ராஜமௌலி இயக்கத்தில் மார்ச் 25 அன்று உலகமெங்கும் ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்திலும் வெற்றி கொடி நாட்டிய திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”.

ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
அனைத்து மொழிகளையும் சேர்த்து ₹1200 கோடிகளை இப்படம் வசூல் செய்தது.

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இப்படம் அங்கும் கல்லா கட்டியது.

தற்போது உலகின் உயரிய விருதான கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது இப்படம்.
