டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ” கோவின் தரவு கசிவு குறித்து கூறப்பட்ட குற்றச்சாட்டு கூட, கோவின் செயலியின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் என்றே நான் நம்புகிறேன். நாட்டின் முதன்மையான சைபர் பாதுகாப்புகள் நிறுவனமான, சிஇஆர்டி-யை கையாண்டு வரும் ஏஜென்சி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், டெலிகிராம் பாட்-ல் வெளியான தகவல்கள் கோவின் செயலியில் இருந்து பெறப்படவில்லை. அவை போலியானவை அல்லது சில மூன்றாம் தர மூலத்தில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இங்கே கோவின் செயலியினை குறைத்து மதிப்பிடுவதற்கு சில சக்திகள் விரும்புகின்றன” என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More