கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு காவல்துறை நாட்டிலேயே மிகச்சிறந்த அமைப்பு. கோவை உக்கடத்தில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் மிகவும் ஆபத்தானது. இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். இதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வெடி பொருள்களை கைப்பறியதோடு, சம்மந்தப்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர். ,இந்த வழக்கில் காவல்துறையினர் நேரடியாக என்ஐஏ-வை அழைத்து விசாரணை நடத்துமாறு கூறமுடியாது. ஆனால், முடிவு எடுக்க வேண்டியவர்கள் நான்கு நாள்கள் கழித்து என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைத்தது ஏன் என கேள்வி எழுப்பிய ஆளுநர், பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்னையாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பயங்கரவாதிகள் நமது எதிரிகள். நண்பர்கள் அல்ல என ஆளுநர் ஆர்.என். ரவி கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More