கோவையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில், கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பிரச்சனையை முன்வைத்து பந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது. விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுள்ள நிலையில் பந்த்துக்கு அவசியமில்லை என்பதால் பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் சட்டவிரோதம் என அறிவிப்பதுடன் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உள்ளார். இந்த மனு, பிற்பகலில் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு அறிவித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More