Mnadu News

கோவையில் பரபரப்பு; பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் டாஸ்மாக் கடை எண் 1810 -இல் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருபவர் விஜய் ஆனந்த். இவர் கடையில் விற்பனையான கலெக்‌ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் டெபாசிட் செய்ய சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் பட்டா கத்தியை காட்டி பணம் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல முற்பட்டனர். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கூச்சல் இடவே, பட்டாகத்தி காட்டி அந்த சூப்பர்வைசரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே சூப்பர்வைசரை இந்தியன் மேட்டுப்பாளையம் வங்கி அருகில் சிலர் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சித்து தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this post with your friends