Mnadu News

கோவை கார் வெடிப்பு சம்பவம்: காவலர்களுக்கு முதல் அமைச்சர் பாராட்டு.

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த எரிவாயு உருளை வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த hரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் இறந்தார். விசாரணையில், ஜமேஷா முபினுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அதேபோல ஜமேஷா முபினுடன் சேர்ந்து சிலர் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சென்னை என்ஐஏ கோவை சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, அதிகாரபூர்வமாக விசாரணையைத் தொடங்கியது.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி முதல் அமைச்சர்; ஸ்டாலின் இன்று பாராட்டினார்.

Share this post with your friends