விபுல் அம்ருத்லால் ஷாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில்,கேரள பெண்கள் மூளை சலவை செய்யப்பட்டு மதப் போர் நடைபெறும் ஈரான் மற்றும் சரியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது காட்டப்படுகிறது. இந்த படத்தின் டிரெயிலருக்;கு பல்வேறு தரப்பிடமிருந்து ஆதரவும் அதே சமயம் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கேரள சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், திருவனந்தபுரத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன்,அதில்,கேரளாவில் இருந்து 32 ஆயிரம் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-இயக்கத்தில் சேர்க்கப்படுவதாக அந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழும் கேரள மண்ணில் சங்பரிவாரின் நச்சு சித்தாந்த விதைகளை விதைக்கும் செயல் இப்படத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More