சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அருகருகே இருக்க வேண்டும். இதுதான் மரபு. இதை பல முறை கோடிட்டு காட்டியும் சபாநாயகர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சட்டசபையில் தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.