அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.