Mnadu News

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: டெல்லி, கோல்கட்டா, உ.பி.,யில் ஐ.டி., ரெய்டு.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம், தங்கம் வாங்கி விற்று முறைகேடாக சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக புகார் எழுந்தன. இது தொடர்பாக, டெல்லி, கோல்கட்டா, லக்னோ, காசியாபாத், நொய்டா, உத்தரபிரதேசத்தின் கான்பூர் உள்ளிட்ட இடங்களில் தங்க வியாபாரிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.,தங்க வியாபாரிகளுக்கு தொடர்புடைய ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை அதிகம் நடக்கிறது என தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தொடர்புடைய சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends