மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றும் செய்யப்பட்டது மத்திய சட்டத்துறை அமைச்சாராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,”பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை பாக்கியமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு நீதி மற்றும் சட்டசேவைகளை வழங்குவதற்காக வழங்கிய பெரிய ஆதரவிற்கு நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே ஈடுபாடு மற்றும் உத்வேகத்துடன் புவி அறிவியல் அமைச்சராக பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More