விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருகிற 8 -ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு,பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருவர்கள். தற்போது பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டும் , பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதியும், வருகிற 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை 5 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More