Mnadu News

சத்தமே இல்லாமல் “மிரள்” படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகிய பரத் பின்பு காதல், செல்லமே, 4 ஸ்டூடண்ட்ஸ், கண்டேன் காதலை, வானம் என தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.

அதன் பிறகு அவர் கதை தேர்வில் கோட்டை விடவே பல சறுக்கல்களை சந்தித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம்
தான் “காளிதாஸ்” விமர்சன ரீதியாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பிறகு கவனமாக கதைகளை தேர்வு செய்து வரும் இவர் தற்போது, சக்திவேல் இயக்கத்தில், பரத், வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் “மிரள்”. ராட்சசன் படத்தை தயாரித்த அசிஸ் ஃபில்ம் ஃபேக்டரி இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியாகி யூடியூப்பில் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டு உள்ளது. வரும் நவம்பர் 11 அன்று இப்படம் வெளியாகி உள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Share this post with your friends