வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன.அப்போது, புலி வேட்டையில், வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். புலன் விசாரணை முடிந்து விட்டது; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.இதையடுத்து, ‘புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கின்றனர்; புலித் தோல், பல், நகம், யாருக்கு விற்கப்பட்டன் இதில் சர்வதேச தொடர்பு உள்ளதா எனவிசாரணை நடந்ததா?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அரசு தரப்பில் முறையான பதில் இல்லாததால், வழக்கு குறித்த ஆவணங்களுடன், ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு, புலன் விசாரணை அதிகாரிக்கும், வனக்குற்ற தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More