ஜகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களுக்கு இடையே இன்று காலை 9 மணியளவில் டிஆர்ஜி குழு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். . இதையடுத்து,தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லையிலிருந்து இந்த குழு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More