Mnadu News

சந்திராயன்-3 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ இணைஇயக்குநர் தகவல்.

சந்திரயான்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (சந்திரனில் ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட உள்ள 3-வது விண்கலம் ஆகும். சந்திரயான்-2 போலவே சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி தகவல்களை அனுப்பும் திறனை வெளிப்படுத்தும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.இந்த விண்கலம் ஸ்ரீPஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திராயன்-3 செயற்கைக் கோள் திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், சந்திராயன்-3 செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More