Mnadu News

சந்திராயன்-3 விண்கலம் ராக்கெட்டில் பொருத்தப்பட்டது: இஸ்ரோ நிறுவனம் தகவல்.

இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், சந்திரயான் – 3 விண்கலம் ஜூலை மாதத்தில் விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நிலவில் தரையிறங்கும், ‘லேண்டர்’ சாதனத்தின் சோதனை சமீபத்தில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்ஜின் திறன் குறித்த சோதனை நடந்தது. அதோடு, பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திராயன்-3 விண்கலத்தின் அனைத்து பாகங்களும் எல்விஎம் ஏம்கே 3 ராக்கேட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. திட்டமிட்டப்படி ஜூலை 2 அல்லது 3 வாரத்தில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும். என்று தெரிவித்துள்ளது.

Share this post with your friends