Mnadu News

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி உத்தரவு வாபஸ்.

வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகக் கூறி இதனை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

Share this post with your friends