மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.தொடர்ந்து மறுநாள் முதல் 17 ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் நடைபெறும். இதனிடையே மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்னதாக காணிக்கைகளை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More