Mnadu News

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையம்:சேகர்பாபு அறிவிப்பு.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ திறக்கப்பட்டுள்ள தகவல் மையம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு கூறுகையில், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியன்று மண்டல பூஜை முடித்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் மையமானது இன்று முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை செயல்படும். அதோடு, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999-ஐ பயன்படுத்தி சந்தேகங்களை அறிந்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends