புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைத்து விட்டு ஆளுநரை வழி அனுப்ப வேண்டும். இதுதான் முறை. ஆனால் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு. சில கருத்துகளை சபாநாயகர் கூறியிருக்கக் கூடாது. தேசிய கீதம் இசைப்பதை ஆளுநர் எதிர்பார்த்திருந்தார். நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
தெலுங்கானாவில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க விடாத அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு எதையும் சரியாகச் செய்வதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் இதற்கு உதாரணம். எதுவாக இருந்தாலும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம், கேள்வியே கேட்கக்கூடாது என்பதுபோல மாநில அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.