Mnadu News

சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீர்முழ்கி இல்லை: அமெரிக்க கடலோரக் காவல் படை தகவல்.

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்று ஆழ்கடலில் காணமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் அளவு வேகமாகக் குறைந்து வருவதால், அதிலுள்ள 5 பேரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், நீர்மூழ்கி மாயமான ஆழ்கடல் பகுதியிலிருந்து சப்தம் எழுந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அது நீர்மூழ்கிக்குள் இருப்பவர்கள் எழுப்பிய ஓசையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதையடுத்து அந்த சப்தம் எழுந்த பகுதியை நோக்கி தேடுதல் பணிகளின் கவனம் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்த சப்தம் டைட்டன் நீர்மூழ்கியிலிருந்து வந்தததாக உறுதியாகக் கூற முடியாது என்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends