டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நடப்பாண்டு 1,70,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுக்கா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வளர்ந்து கதிர் வரும் பயிர்களும் நீரில் மூழ்கி சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.