அமெரிக்காவில் சம பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலின திருமணங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த சட்ட அங்கீகாரத்தை அந்த உச்ச நீதிமன்றமே அண்மையில் ரத்து செய்து, மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பழமைவாத நீதிபதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக கருதப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தைப் போலவே, சம பாலினத்தவர் திருமணங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.அதோடு. வெள்ளை இனத்தவர்கள், கருப்பினத்தவர்கள் போன்ற மாற்று இனத்தினருக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின. இந்த நிலையில், அந்த மசோதாவில் அதிபர் பைடன் தற்போது கையொப்பமிட்டு அதனை சட்டமாக்கியுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More