உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிரபல நிறுவனமாக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அதுவும் இந்த வருடம் ரெட் ஜெயன்ட் வெளியிட்ட அனைத்து படங்களுமே வசூலை அள்ளி, தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் லாபகரமாக அமைந்தது. விக்ரம், பீஸ்ட், டான், கட்டா குஸ்தி என சிலவற்றை கூறலாம்.

வரும் பொங்கலுக்கு ரீலீஸ் ஆகும் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழக வெளியீட்டு உரிமையை கைபற்றி உள்ளது. ஆனால், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தமிழகம் முழுதும் வெளியிடுவதாக இருந்தது.

தில் ராஜூ ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் சென்னை, செங்கல்பட்டு போன்ற நான்கு பகுதிகளில் மட்டும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக அதிகார்பூவ தகவல் வெளியாகி உள்ளது.
