Mnadu News

சரத் பவார் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்: தொண்டர்கள் கொண்டாட்டம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீரென அறிவித்தார். அத்துடன்; 15 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து அடுத்த தலைவரை தேர்வு செய்யவும் வலியுறுத்தியிருந்தார்.இது அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என்று கட்சியினர் பலரும் வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும் அவ்வாறே வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில், ‘சரத் பவார் பதவி விலகல் முடிவை ஏற்க முடியாது, கட்சியின் தலைவராக அவரே தொடர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார். இந்த அறிவிப்பினை, மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்திற்கு வெளியே தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More