பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், வாகன நிறுத்துமிடம், சரிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியது.வாகன நிறுத்துமிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. மேல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓரிரு கார்கள் உள்ளிட்டவை, சரிந்து விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.அதிர்ஷ்டவசமாக வாகன நிறுத்துமிடத்தில் விபத்து நிகழ்ந்தபோது யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த வாகன நிறுத்துமிடத்துக்கு அருகே கட்டட பராமரிப்புப் பணி நடந்து வந்ததால், கீழ் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More