பி. எஸ்.மித்ரன் இயக்கத்தில் சென்ற மாதம் வெளியான திரைப்படம் “சர்தார்”. இயக்குநர் மித்ரன் & நடிகர் கார்த்தி இருவருக்குமே இது ஒரு முக்கியமான படம், எப்படி என்றால் இந்த படம் வென்றால் கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றி, அதே போல இயக்குநர் மித்ரனுக்கு இது வென்றால் தான் அடுத்த படம்.
இது இப்படி இருக்க சிவகார்த்திகேயன் படத்துடன் வெளியானது சர்தார். ஆரம்பத்தில் குறைவான திரை அரங்குகள் ஒதுக்கப்படாலும் பின்பு ரசிகர்களின் வரவேற்பு மற்றும் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் படத்தை 600 மேற்ப்பட்ட திரை அரங்குகளை பெற்று தந்தது.
தற்போது வரை இப்படம் 85 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் மித்ரனுக்கு டோயடோ கார் ஒன்றை தயாரிப்பு குழு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பரிசளித்து கௌரவம் செய்துள்ளது.