Mnadu News

சர்தார் படேலின் இரும்புக்கரம் இந்தியாவை ஒன்றிணைக்கும்: ராகுல் டுவிட்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமரும், இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அவர்களது உருவப்படத்திற்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரம் இந்தியாவை ஒருங்கிணைக்கும். அவர் பற்றவைத்த ஒற்றுமையின் சுடரை முன்னெப்போதையும் விட இன்னும் ஒளிரச்செய்யவதே அவருக்குச் செலுத்தும் மிக சரியான அஞ்சலி” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends