Mnadu News

சர்வதேச அளவில் பாகிஸ்தான் மதிப்பிழக்கிறது: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேதனை.

பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி வருகின்றனர். சமீபத்தில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு 220 மில்லியன் டாலருக்கு அதாவது, இந்திய மதிப்பு படி ஆயிரத்து 815 கோடி ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டது.இந்நிலையில், இந்த குத்தகை குறித்து பேசியுள்ள இம்ரான் கான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பதற்றத்தில் உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும் பிரச்னைகளில் ஒன்றாகும்,சர்வதேச அளவில் மதிப்பிழக்கும் வகையில் பாகிஸ்தான் ஜனநாயகம் பெரும் சரிவுக்கு ஆளாகி வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் சட்டமும் பொருளாதாரமும் சரிந்து வருகிறது. ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் நிறுவன அமைப்பும் கண் முன்னே சரிந்து வருகிறது. என்று கூறி உள்ளாhர்.

Share this post with your friends