கொரோனா வைரஸ் தொற்று பரவலும் அது குறித்த அச்சமும் இன்னும் மக்கள் மத்தியில் ஓய்ந்தபாடில்லை எனலாம்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டு உள்ளது.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 4 ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.