Mnadu News

சர்வதேச வயது கணக்கீட்டு முறையை ஏற்ற தென்கொரியா: மகிழ்ச்சியில் மக்கள்.

தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது.இரண்டாவது முறை அந்நாட்டில் பிறந்த நாள் தேதியில் தான் ஒருவரின் வயது கூடுதல் பெறுகிறது என்றில்லை. ஜனவரி 1 ஆம் தேதியை அவர்கள் கடக்கும் போதே அவர்களுக்கு ஒரு வயது கூடி விடுகிறது. வயது கூடுவதில் பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படாது.இந்த நிலையில் இந்த முறைகளை நீக்கி தற்போது சர்வதேச அளவிலான வயது கணக்கீட்டு முறையை தென்கொரியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாற்றத்தை சுமார் 70 சதவீதம் தென்கொரிய மக்கள் வரவேற்றுள்ளனர்.

Share this post with your friends