Mnadu News

சவுதி பாலைவனத்தில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி சொகுசு கட்டிடம்.

சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்று உள்ளது. அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் தாமிரத்தினால் செய்யப்பட்ட புதிய வகையான கண்ணாடியால் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம், மணல் புயல்கள், அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாலைவனத்தில் நிகழக்கூடிய பிற வானிலை சவால்களையும் சமாளிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. மராயா கண்ணாடி கட்டிடத்தின் மேற்கூரை பாலைவனத்தின் காட்சிகளை பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது.இங்கு நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

Share this post with your friends