தூத்துக்குடியில் சிவன் கோவில் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். கோவிலில் சுவாமியை வழிபட்ட பின்னர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் சில மணி நேரம் சாமி தரிசனம் செய்தார். மேலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் சிவன் கோயிலை அடுத்து அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். செந்தாமரை சாமி தரிசனம் செய்வதை யாரும் புகைப்படம் வீடியோ எடுக்காதவாறு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More