Mnadu News

சாரதா மடத் தலைவர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்.

மேற்குவங்காளம் தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பு சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா. 102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரவ்ராஜிகாவின் உயிரிழந்தார். பிரவ்ராஜிகா பக்திபிரணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி, மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ப்ரவ்ராஜிகா பக்திபிரான் மாதாஜிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். ஸ்ரீP சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் மூலம் சமுதாயத்திற்கு சேவை செய்ய அவர் ஆற்றிய பெரும் முயற்சிகளுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். எனது எண்ணங்கள் அனைத்து அந்த நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களிடம் உள்ளன. ஓம் சாந்தி. என பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More