Mnadu News

சிங்கம் 4க்கு பச்சை கொடி காட்டிய நடிகர் சூரியா! விரைவில் அறிவிப்பு!

கோவில், தமிழ், ஆறு, சாமி, அருள், வேல், தாமிரபரணி, சிங்கம் 1,2,3, பூஜை, யானை என இயக்குநர் ஹரி படங்கள் எப்போதுமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அப்படி, ஹரியும் சூரியாவும் இணைந்து கொடுத்த மாபெரும் வெற்றி சீரிஸ் தான் சிங்கம் 1,2,3. இந்த மூன்று படங்களுமே வசூல் மழை பொழிந்து சூரியாவின் கமர்ஷியல் தரத்தை உயர்த்தியது.

சென்ற வருடம் இவர்கள் கூட்டணியில் அருவா என்கிற படம் ஆரம்பம் ஆக இருந்த நிலையில் சூரியாவின் அடுத்தடுத்த படங்களால் அது தள்ளி போனது. தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் அதை முடித்த உடன் அடுத்த வருட இறுதியில் சிங்கம் 4 ஷூட்டிங் இல் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends