கர்நாடாக முதல் அமைச்சர் பதவிக்கான உள்கட்சி இழுபறிகள் முடிவுக்கு வந்த நிலையில் வரும் 20 ஆம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஒருமித்த கருத்துடைய பல்வேறு கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டும் கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ககோலி தஸ்திதார் கலந்து கொள்கிறார். இத்தகவலை அக்கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெயன் உறுதி செய்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More