Mnadu News

சித்தா, ஆயுர்வேதா படிப்பு : தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.

தமிழகத்தில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதிக்கு இருக்கும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 289 இடங்கள் இருக்கின்றன. அதில் 7 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கீழ் 21 இடங்களும் மற்றவையில் 259 இடங்களும் உள்ளன. 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 660 இடங்கள் இருக்கின்றன. இதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாகி இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்கள், அரசு இடஒதுக்கீட்டிற்காக 822 மற்றும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 115 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டும் இடஒதுக்கீட்டிற்கான ஆணைகளை சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேரவையில் அறிவித்தது போல தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை குறைந்த செலவில் சோதனை செய்யும் திட்டம் இன்று தொடங்கப்படுவதாக தெரிவித்தார்.
சித்தா மருத்துவமனை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதில் புதிய ஆராய்ச்சிகள் நடைபெறும் என்றும் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் ஒப்பந்தம் செவிலியர்களுக்கு 11 மாதமாக ஊழியம் வழங்காததைப் பற்றி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Share this post with your friends