Mnadu News

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு.

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தேர்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தேர்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும்.
அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பார்வையாளர்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள், உள்ளக மேற்பார்வையாளர்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.
இந்த நிலையில், செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்னவாகும்? என்ற கேள்விக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு இரண்டாம் முறையாக வாய்ப்பளிக்கப்படாது. எனவே, தேதிகளை சரியாக குறித்துவைத்துக் கொண்டு, திட்டமிட்டபடி செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ‘2023-இல் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 40 சதவீத அளவிலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 30 சதவீதமும் திறனறி அடிப்படையிலான கேள்விகள் இடம்பெறும்’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறியிருப்பதாவது, தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் திறனறி அடிப்படையிலான கேள்விகளை அறிமுகப்படுத்தும் வகையில் கேள்வித்தாள் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 2022-23 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 40 சதவீத கேள்விகளும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 30 சதவீத கேள்விகளும் இதுபோன்ற திறனறி அடிப்படையில் கேட்கப்படும்.
கொள்குறி தேர்வு முறை (மல்டிபில் சாய்ஸ்), சுயமாக சிந்தித்து எழுதுதல், மதிப்பீடு மற்றும் எடுத்துக்காட்டு அடிப்படையில் என பன்முக கேள்விகளை உள்ளடக்கியதாக இந்தத் திறனறி கேள்விகள் கேட்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More