Mnadu News

சிபிஐ காவலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை: மணீஷ் சிசோடியா கருத்து.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. அதன்படி அவருடைய காவல் இன்று முடிவடைவதால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.இதனிடையே, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், தில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘கைதுக்கு முன்னதாகவே சிபிஐ விசாரணைக்கு அழைத்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டது. எனவே, தன்னை காவலில் வைத்திருப்பதன் மூலமாக எந்த பயனும் இல்லை’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More