Mnadu News

சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் 45 இந்திய பல்கலைக்கழகம்.

லண்டனைச் சேர்ந்த கியூ.எஸ். நிறுவனம், உலக அளவில் முன்னணியில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது .அதன் படி, உலக அளவில் 149வது இடத்தை மும்பை ஐஐடி பிடித்துள்ளது.டெல்லி ஐஐடி 197ஆவது இடத்தையும்,,ஐஐடி காரக்பூர் 271 ஆவது இடத்தையும்,ஐஐடி கான்பூர் 278 ஆவது இடத்தையும்,ஐஐடி மெட்ராஸ் 285 ஆவது இடத்தையும்,ஐஐடி கவுகாத்தி 364ஆவது இடத்தையும்,ஐஐடி ரூர்க்கி 369ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.அதேபோல், உலகின் முதல் 500 பல்கலைக்கழங்களில் டெல்லி பல்கலைக்கழகம் 407ஆவது இடத்தையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 427ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. .இது குறித்து பேசியுள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த ஆண்டுக்கான கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியமைத்துள்ளார்.அதனால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்று உலகத் தரத்தில் உள்ளன. என்று கூறியுள்ளார்

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More