சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜூன் 17ஆம் தேதிமுதல் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 198 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பெண்களுக்கான 8 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ,சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More