Mnadu News

சிறுதானிய விவசாயிகளின் மீது அரசு கவனம் செலுத்துகிறது: பிரதமர் மோடி உரை.

டெல்லியில் பூசா நகரில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அஞ்சல் தலை ஒன்றையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். இதன்பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், சர்வதேச நலன்களுக்கு தேவையானது மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வுக்கான அடையாளமும் ஆகும். இந்தியாவின் முன்மொழிவுகள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னர், 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அமைப்பு அறிவித்து இருப்பது என்பது நமக்கு கிடைத்த மிக பெரிய கவுரவத்திற்கு உரிய விசயம். இந்த நிகழ்ச்சியின் இன்று நாட்டின் 75 லட்சத்திற்கும் கூடுதலான விவசாயிகள் காணொலி வழியே கலந்து கொண்டுள்ளனர் எனும்போது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது வெளிப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். இந்தியாவின் சிறுதானிய இயக்கம், 2.5 கோடி விளிம்பு நிலையிலான விவசாயிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாக அமையும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுதானிய விவசாயிகளுக்கு முதன்முறையாக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

Share this post with your friends

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் குருவிமலை...

Read More