Mnadu News

சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழப்பு…!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் வயல் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முக சுந்தரம் வீட்டின் அருகே தோட்டத்திற்கு சென்று தேடியபோது உடல் முழுவதும் காயங்களோடு பசு மாடு இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தையின் கால் தடங்களை கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Share this post with your friends