Mnadu News

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: கொடூரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து இந்த புகாரை விசாரித்த போலீசார், செல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம்; தீர்ப்பு வழங்கி உள்ளது.ஆனால் இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இவர்களின் கருத்தையே எம் நாடு தொலைக்காட்சியும் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends